கொரோனா குறித்து போலி செய்தி- சிஜடி விசாரணை

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்திய சாலையில் கொரோனா தொற்றாளர்கள் 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என வெளியான செய்தியில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாதென பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் இல்லை. எச்சந்தர்ப்பத்திலும் சிறுவர்களுக்கான சிகிச்சையை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையை வேறுவிதமாக பயன்படுத்தி இந்த உண்மைக்கு புறம்பான செய்தி உருவாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து சிஐடியினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். - என்றார்.

No comments