அரிசி மூடைகள் வழங்கப்பட்டன

கொரோனா காரணமாக நாடு முடக்கப்பட்டு இருப்பதால் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொண்டு மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அன்றாடம் தொழில் புரிந்து வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு சிறு உதவியாக அரிசி மூடைகள் வழங்கும் செயற்திட்டம் மாநகர சபை நிதியினூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகர முதல்வர் தி.சரவணபவனின் வழிகாட்டலின் கீழ் மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும் மாநகரசபைப் பாதீட்டில் 30 மில்லியன்கள் ஒதுக்கீடு செய்து வட்டாரத்திற்கு 150 மூடைகள் வீதம் அந்த அந்த கிராமசேவகர்களினூடாக அவர்களினால் தெரிவு செய்யபப்பட்ட மக்களுக்கு இவை வழங்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் இன்றைய தினம் (02) புளியந்தீவு தெற்கு வட்டாரத்திற்கான உதவிகள் வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் தலைமையில் புளியந்தீவு தெற்கு கிராமசேவை உத்தியோகத்தரிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

No comments