நாங்கள் பொருளாதாரத்தைத் திறக்கிறோம்: ஆனால் மக்களின் சமூக வாழ்க்கையைத் திறக்கவில்லை!

நாங்கள் பொருளாதாரத்தைத் திறக்கிறோம், ஆனால் மக்களின் சமூக வாழ்க்கையைத் திறக்கவில்லை என்று நியூசிலாந்துப் பிரதமர் திருமதி
ஆர்டெர்ன் அவர்கள் நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று நோயின் பரவில் நியூசிலாந்தில் குறைவந்ததால் மீண்டும் நாளை முதல் முடக்க நிலை தளர்த்தப்படவுள்ளது. குறிப்பாக அத்தியாவசியமற்ற வணிக நிலையங்கள், சுகாதார மற்றும் பள்ளிகள் மீண்டும் திறக்க முடியும் என்றார்.

பெரும்பாலான மக்கள் எல்லா நேரங்களிலும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அத்துடன் அனைத்து சமூக தொடர்புகளையும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாங்கள் பொருளாதாரத்தைத் திறக்கிறோம், ஆனால் நாங்கள் மக்களின் சமூக வாழ்க்கையைத் திறக்கவில்லை என பிரதமர் திருமதி ஆர்டெர்ன் செய்தியாளர் சந்திப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் கொரோனா தொற்று நோய் முற்று முழுதாக முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தில் கொரோனா தொற்று நோயால்  19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 1,500 பேருக்கு  தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments