யாழில் மேலும் 2:17 ஆகியது புள்ளிவிபரம்?
யாழ் பலாலியில் இன்றும் மேலும் இருவருக்கு கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய பரிசோதனையில் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் யாழில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே தனிமைப்படுத்தப்பட்ட 20 பேரில் 4 பேர் தான் இன்னமும் கொரோனோ தொற்று உறுதியாகமல் உள்ளனர்.
மதபோதகருடன் நெருங்கி பழகினவர்கள் என தனிமைப்படுத்தப்பட்ட 20 பேரில் 1ஆம் , 2ஆம் திகதி பரிசோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது
அன்றைய பரிசோதனையில் தொற்று இல்லாத 14 பேரையும் நேற்றைய தினம் 14ஆம் திகதி இரண்டாம் கட்டமாக பரிசோதித்த போது 8 பேருக்கு தொற்று உறுதியானது.
எனினும் எஞ்சிய 6 பேருக்கு தொற்று இல்லையென கூறப்பட்ட நிலையில் இன்று 15ஆம் திகதி மேலும் பரிசோதிக்கப்பட்ட போது மேலும் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஏனைய மூவருக்கும் நாளைய தினம் மூன்றாம் கட்டமாக பரிசோதிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
Post a Comment