ஊரடங்கை மீறியோர் விசாரணை வளையத்தினுள்?


கொரோனோ அச்சத்தின் மத்தியில் யாழ்.குடாநாடு அல்லாடிவரும் நிலையில் அது பற்றி கிஞ்சிதேனும் அக்கறையின்றி செயற்படும் தரப்புக்கள் பற்றி விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.

நேற்றைய தினம் காரைநகரிலுள்ள முத்துமாரி ஆலயத்தில் திருவிழா நிகழ்வு நடாத்த காவல்துறை அனுமதித்துள்ளது.

அதேபோன்று நேற்றும் இன்றும் இணுவில் உள்ளிட்ட சில இடங்களில் கோலாகலமாக திருமண விழாக்கள் நடத்தப்பட்டுள்ளமை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் ஊரடங்கினை மீறியமை தொடர்பில் கைதுகள் முன்னெடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக காவல்துறையை சேர்ந்த சிலர் உத்தியோகபூர்வமற்ற வகையில் அனுமதித்துள்ளமை பற்றியும் விசாரணைகள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments