ஏப்ரல் 6 வரை ஊரடங்கு நீடிப்பு!


இலங்கையில் கொரோனோ தொற்று மோசமடைந்து வருகின்ற நிலையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குசட்டம் ஏப்ரல் 6ம் திகதி வரை
நீடிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே மட்டக்களப்பு மக்கள் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் இரண்டு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்றும் கொரோனா தடுப்பு செயலணியிடம் வைத்திய நிபுணர் எஸ். மதனழகன் எச்சரிக்கை செய்துள்ளார்.

கொரோனா தொற்று ஒரு சங்கிலித் தொடர் எனவும் மாவட்டத்தை மூடி தனிமைப்படுத்தாவிட்டால் இவ்வாறு பாரிய விளைவு ஏற்படுவதைத் தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஏப்ரலில் காலநிலை மாறும்போது பிரச்சினை பெரிதாகலாம்.எனவே தனிமைப்படுத்தல் இல்லாமல் நெருக்கமாக இருந்தால் ஓட்டு மொத்தமாக ஒரு நாட்டை அழிக்கும்போது 45 தொடக்கம் 75 வீதம் அதன் பாதிப்பு இருக்கும். குறைந்தபட்சம் 40 வீதம் கொரோனா தொற்றுக்கு இந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் 5 இலட்சம் பொதுமக்கள் வாழுகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்படுவார்கள எனவும் அவர் எச்சரித்துள்ளார். 

No comments