சி.வி கூட்டணிக்கு காத்திருக்கும் வரதர்?


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தங்களது கூட்டணியில் இணைவது சம்பந்தமாக அழைப்புவிடுத்தால் தான் பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராக இருப்பதாக தமிழர் சமூக ஜனநாயக கட்சி தலைவர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடுவது என தற்போது வரை தீர்மானித்துள்ளோம். எனினும் வடக்கு கிழக்கு சார்பாக புதிய கூட்டணிகள் அமைக்கப்படுவதால் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில் நாம் இணைவது சம்பந்தமாக அவர்கள் அழைப்பு விடுத்தால் பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றோம். எமக்கும் அவர்களுக்கும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை.தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்துவைக்க அனைவரும் ஒற்றுமை பட வேண்டும்.அதனை விடுத்து தேர்தல் காலங்களில் ,ணையும் கூடடணியாக ,ருக்க கூடாது.,துவரை எனக்கு அவர்களிடம் ,ருந்து அழைப்பு கிடைக்கவில்லை.அழைத்தால் பேச தயாராகவே இருக்கின்றேன்.

ஜெனிவா தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பரபரப்பை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் தமது இழந்த செல்வாக்கை மீள பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

ஐநா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30-1  தீர்மானத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை.எனவே அரசாங்கம் அந்த தீர்மானத்தில் இருந்து விலகுவதால் எமக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட போவதில்லை ஆனால் இதனை அரசு விலகுகிறது ஐநாவுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறுகிறது பூதாகரமாக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றது.மக்கள் ,ம்முறையாவது சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

No comments