துண்டு போட்டு காத்திருக்கும் ஆனோல்ட்?


நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் மாநகர முதல்வர் பதவியை இழக்கவுள்ள இமானுவேல் ஆர்னோல்ட் நாடாளுமன்றத் தேர்தலில், தான்
களமிறங்கத் தயாரென இன்று (02) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பில், அவரது நண்பர்கள் அவரிடம் வினவிய போதே,இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் இளம் தரப்பிற்கு சந்தரப்பமென சுமந்திரன் கச்சை கட்டி களமிறங்கியுள்ள நிலையில் சயந்தன்,ஆனோல்ட் மற்றும் சுகிர்தன் ஆகியோர் களமிற்ஙகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆயினும் ரவிராஜ் மனைவியினை தேர்தலில் இறக்க முடிவு செய்துள்ளதால் சயந்தனின் பெயர் நீக்கப்பட அடுத்து தனக்கான சந்;தரப்பத்தை ஆனோல்ட் எதிர்பார்த்து காத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments