சிறையிலுள்ள தலைவரிற்கு : வைட் டைமண்ட்!
சோடாப்போத்தல்களுள் வைட் டைமண்ட் ரக மதுபானத்தைக் கலந்து, நேற்று வெலிக்கடை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவை பார்ப்பதற்காக வந்த நபர் ஒருவர் சிறைச்சாலை அவசர விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போது சிறையிலுள்ள மகிந்த சகபாடியான முன்னாள் அமைச்சரை பார்வையிட் வந்த வேளை அவரிற்கு மதுபானம் எடுத்துவந்த நபரே கைதாகியுள்ளார்.

Post a Comment