ஐக்கிய மக்கள் சக்தி உதயம்?


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், பிரதான கட்சிகள்  4, சிவில் அமைப்புகளின் ஒன்றிணைவுடன் ஐக்கிய மக்கள் சக்தி (சமஹி ஜனபலவேகய) கூட்டமைப்பானது, இன்று (2) காலை கொழும்பு- தாமரைத் தடாக அரங்கில் உதயமானது.
இதில் ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய இடதுசாரி முன்னணி, சிவில் அமைப்புகள் சார்பில் ஜாதிக மஹஜன கட்சி, பிரஜைகள் கூட்ட​ணி சார்பில் அபி புரவெசியோ அமைப்பு, ஊடகவியலாளர்கள் சார்பில் ஜனநாயக ஊடகவியலாளர் அமைப்பு, தொழிற்சங்கங்கள் சார்பில் வெடபிமே அபி அமைப்பு உள்ளடங்கலாக 18 தொழிற்சங்கங்கள், 20 சிவில் அமைப்புகள் இந்த ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைக்கோர்த்துள்ளன.
குறித்த தரப்பினருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

No comments