கொரோனா வைரஸ் பரவல்! பிரித்தானியா பள்ளிகள் நாளை முதல் மூடல்!


கொரோனா தொற்று நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பிரித்தானியாவில் உள்ள பள்ளிகள் அனைத்தும் நாளை வெள்ளிக்கிழமை
முதல் காலவரையின்றி மூடப்படுகிறது என பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம் கொரோன வைரஸ் தொற்று 2626 பேர் உள்ளாகியுள்ளனர்.

56,221 பேர் கொரோனா வைரல் தொற்று குறித்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். அவற்றில் 53,595 பேருக்கு எதிர்மறையாக உள்ளதை பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

No comments