லண்டனில் மட்டுப்படுத்தப்படுள்ள பொதுப் போக்குவரத்துக்கள்

கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் லண்டனில் அத்தியாவசியப் போக்குவரத்துக்களை மேற்கொள்ள குறைந்த
சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் வாட்டர்லூ மற்றும் சிட்டி லைன் நிலத்தடி தொடருந்துகள் இருக்காது எனவும் அதே நேரத்தில் இரவு நேர நிலத்தடி தொடருந்து சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் இன்று வியாழக்கிழமை முதல் பரிமாற்றம் செய்ய முடியாத 40 நிலத்தடி தொடருந்து நிலையங்கள் மறு அறிவித்தல் கிடைக்கும் வரை மூடப்படுகின்றன.

லண்டன் பேருந்துகள் குறைவான சேவைகளுடன் பகலிலும் இரவிலும் இயக்கும் அத்தியாவசிய பயணங்களைத் தவிர வேறு எதற்கும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று அனைவருக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments