கொரேனாவால் பிரான்சில் ஒரு நாளில் 89 பேர் பலி!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 89 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது,

அத்தோடு நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 264 ஆக உயர்ந்துள்ளது  என்று பிரெஞ்சு சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "எங்களுக்கு ஒரு தொற்றுநோய் உள்ளது, அது விரைவாக மிகவும் தீவிரமாகி வருகிறது" என்று ஜெரோம் சாலமன் செய்தியாளர்களிடம் கூறினார், பிரான்சில் இப்போது 9,134 உறுதிப்படுத்தப்பட்ட வைரஸ் பாதித்தவர்கள் உள்ளனர், அவர்களில் 3,626 பேர் மருத்துவமனையில் உள்ளனர் மற்றவர்கள் வீடுகளில் வைத்தே மருத்து பராமரிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

No comments