கொரோனா தொற்று! பிரித்தானியாவில் மக்கள் ஒன்றுகூடும் இடங்களை மூடுமாறு அறிவிப்பு

கொனோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவில் எடுத்துச் செல்லும் உணவைத் தவிர (Takeaway Food ) மக்கள் அதிகமாகக்கூடும்
இடங்களான கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், கோப்பி அருந்தகங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள், விளையாட்டு பயிற்சி நிலையங்கள், ஓய்வு நேர மையங்கள் போன்றன நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் மூடுமாறு பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்கு ஒரு மாதத்திற்கு £2,500 வரை 80% ஊதியத்தை வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேபோன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அயர்லாந்துகடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கேளிக்கை விடுதிகள் மற்றும் மதுபான கடைகளை மூடும்படி கேட்டிருந்தது.

கொரோனா வைரசால் இங்கிலாந்தில்  167 பேரும், ஸ்காட்லாந்தில் 6 பேரும், வேல்ஸில் 3 பேரும், வடக்கு அயர்லாந்தில் ஒருவரும் இறந்துள்ளனர்.

No comments