வடக்கிற்கு கொரோனாவை கொண்டுவர பாடுபடும் அரசு?


இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சத்தம் சந்தடியின்றி கொரோனோ பாதிப்பிற்குள்ளான சந்தேகத்திற்குரிய ஒரு தொகுதியினரை வடக்கு இராணுவ தளங்களிற்கு இலங்கை அரசு அனுப்பி வைத்துள்ளது.

மாவட்ட செயலர்களிற்கோ மருத்துவ துறையினருக்கோ அறிவிக்கப்படாது முல்லைதீவு கேப்பாவுலவு கடற்படைத்தளம்,இரணைமடு விமானப்படை தளம்,கொடிகாமம் இராணுவ தளம் மற்றும் மற்றும் பலாலி விமான தளத்தில் இத்தகைய மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இன்று காலை இராணுவ மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் அவர்கள் ஏ-9 வீதியினுடாக தற்போதைய ஊரடங்கை பயன்படுத்தி கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே முல்லைதீவு கேப்பாபுலவு விமானப்படை தளத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க வேண்டியவர்களை மாத்திரமே அழைத்து வந்திருப்பதாக உள்ளுர் விமானப்படை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

எனினும் உள்ளுர் மருத்துவ கட்டமைப்பிற்கு அறிவிக்காது இவ்வாறு தருவிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளது.


No comments