கொழும்பிலிருந்து புறப்பட்ட கடைசி புகையிரதம்?


இன்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் ஊர் அடங்கு சட்டத்தை கருத்தில் கொண்டு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட கடைசி ரயிலின் புகைப்படம் இதுவாகும் . வைரஸ் பரவுவதற்கான தேசிய நாளாக இன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் போதிய போக்குவரத்து ஏற்பாடுகள் இன்மையால் மக்கள் புகையிரதத்தில் இடித்துப்பிடித்து பயணம் செய்வதை சிங்கள ஊடகவியலாளர்கள் பகிர்ந்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட திட்டமோ வேலையோ இல்லாத தலைவர்களின் அவசர முடிவுகளுக்கு பலியான நம் நாட்டு மக்கள் உண்மையில் ஏழைகள தான் என சிங்கள சாதாரண தட்டு மக்களது அவலத்தை அவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

இன்றைய ஊர் அடங்கு சட்டத்தினால் கொழும்பு முற்றாக முடங்கிப்போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments