பிரச்சாரங்களை நிறுத்தியது முன்னணி!


தற்போதைய காலத்தின் தேவையறிந்து தேர்தல் கால பிரச்சாரங்கள் அனைத்தையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இடைநிறுத்தியுள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் தமது கட்சியின் பிரச்சார பிரிவினர் “எமது செயற்பாடுகளால் எம்மை நாமே பாதுகாப்போம்' என்ற தொனிப் பொருளில் வடகிழக்கு மக்களுக்கான கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரச்சார செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தைப் பொருத்தவரை வீண் அச்சம் வேண்டாம் என்று சொல்லப்பட்டாலும் வீண் அலட்சியம் வேண்டாம் என்பதே உண்மை .எமது மக்களுக்கு சுய அக்கறை சுய சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தேவை.

அரசினால் பிறப்பிக்கப்படும் இரண்டு நாள் ஊர் அடங்கு சட்டத்தை அமுல்படுத்த எமது மக்கள் முழுமையான ஒத்துழைப்பினையும் நல்கவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

No comments