வலிகிழக்கு முன்னுதாரணம்:நிதி ஒதுக்கீடு?


வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் அசாதாரண சூழ்நிலை காரணமாகப் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உலருணவு நிவாரண விநியோகத்தினைச் செய்வதற்காக 5 மில்லியன் ரூபாய்களை ஒதுக்க பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை(27) காலை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் இத் தீர்மானத்தினைப் பெறுவதற்கான மாதாந்த அவைக் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்திலேயே தவிசாளர் தியாகராஜா நிரோஷினால் இவ் அறிவித்தல் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டபோது சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

No comments