போராளிகளிற்கு தளம் அமைத்தது கூட்டணி!

மட்டக்களப்பு மாவட்டத்திலும் யுத்தத்தின் போது  தனது அவயவம்  ஒன்றை இழந்த முன்னாள் போராளி வாமதேவன் சுசாந்தன் என்பவரை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் களம் இறக்கியுள்ளார்கள்.இவருக்கான ஆசனம் பங்குதாரக் கட்சியில் ஒன்றின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான விக்ரரின் சகோதரி மாலினி தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். வன்னியின் பல்வேறு பகுதிகளில் வலய கல்வி பணிப்பாளராக பணியாற்றிய இவர் ஓய்வுபெற்றபின்னர் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகின்றார்.

இதேவேளை வன்னி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முன்னாள் பெண் போராளி ஜெஸ்மின் கிளெறிஸ் பரமநாதன் என்பவரை விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேசிய பட்டியலில் உள்ளடக்கியுள்ளார். சிறந்த சமூக சேவையாளரான இவர் எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

No comments