ஆராதனைக்கு சென்றோரை பதிவு செய்ய அழைப்பு

யாழ்ப்பாணம் - செம்மணி, இளையதம்பி வீதியில் உள் பிலதெல்பிய தேவாலயத்தில் கடந்த 15ம் திகதி இடம்பெற்ற ஆராதனையில் கலந்து கொண்டவர்களை உடனடியாக தமது பெயா், முகவாியை பதிவு செய்யுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் கோாிக்கை விடுத்துள்ளாா்.

கடந்த 15ம் திகதி குறித்த தேவாலயத்தில் வெளிநாட்டிலிருந்த வந்த மதபோதகா் ஒருவாினால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்து கொண்ட இருவா் கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா்.

இவர்கள் பங்கேற்ற ஆராதனை நிகழ்வில் வேறு பகுதிகளை சோ்ந்தவா்கள் என பலா் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்படி குறித்த ஆராதனைக்கு சென்றவர்களை உடனடியாக தமது பெயா் மற்றும் இருப்பிட விலாசம் என்பவற்றை 0212217278 என்ற முகவாிக்கு உடனடியாக அறியத்தரவும் என அவா் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் சுகாதார பணிப்பாளர்.

No comments