வேடிக்கை பார்த்த மூவர் கைது

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் எப்படி உள்ளது என பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் பிரயாணித்த 3 பேர் கைதாகியுள்ளனர்.

இவர்கள், இன்று (21) காலை 8.10 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டுமாவடி பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று பொலிஸார் வீதிப் பாதுகாப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது இரு மோட்டார் சைக்கிளில் வெவ்வேறு வீதிகளில் பயணித்த 3 பேரை பொலிஸார் இடைநிறுத்தி, எங்கு செல்வது என வினவினர். இதன்போது, அவர்கள் ஊரடங்குச் சட்டம் எவ்வாறு என பார்ப்பதற்காக வீதிக்கு வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

No comments