பாஸ்டரை தொடர்புகொள்ள முயற்சியாம்?


சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த போதகருடன் தொடர்புட்டவர்களை அடையாளங்காண முயற்சிகள் மும்முரமடைந்துள்ளன.

குறித்த ஆராதனைக்கு ஏறத்தாழ 250 பேர் வரையில்; கலந்து கொண்டுள்ளார்கள். நாவற்குழி, யாழ்.நகர், நல்லூர் மற்றும் மானிப்பாய் பகுதியைச் சார்ந்தவர்கள் ஆராதனையில் பங்கெடுத்ததாக அறியப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினர் தற்போது இவர்களது இருப்பிடங்களைக் கண்டறிந்து தனிப்படுத்தல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். 

இதுவரையில் போதகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவர் கொரோனா நோய்க்கான அறிகுறிகளுடன் யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் அதனை வைத்தியசாலை நிhவாகம் உறுதிப்படுத்தவில்லை. மேலும் சிலர் நோய் அறிகுறிகளுடன் காணப்படுவதாகவும் அனைவரையும் வைத்தியசாலையில் அனுமதிப்பதை வைத்தியசாலை நிர்வாகம் விரும்பவில்லை எனவும் அறிய முடிகின்றது. 

குறித்த போதகரின் நோய் நிலைமையை உறுதிப்படுத்தும் முகமாக அவருடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments