பாடசாலை மூடல்:தேர்தல் நோக்கங்களிற்காகவா?


கொரோனா தொடர்பான அச்சம் உலகளவில் இருந்தாலும் -கொரோனா பீதிக்காக பாடசாலைகளை மூடும் முடிவை கல்வியமைச்சு உண்மையில் எடுக்கவில்லை.அதிபர்,ஆசிரியர்களின் பணி பகிஸ்கரிப்பு 16,17,18 தொழிற்சங்களால் அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , தேர்தல் ஆணையாளரும் தொழிற்சங்க போராட்டம் தொடர்பாக தடை ஏற்படுத்தியிராத நிலையில் - தேர்தல் முடியும்வரை தமக்கேற்படப்போகும் அழுத்தங்களைக் குறைப்பதற்கான உத்தியையே அரசாங்கம் கையாண்டுள்ளது.அதற்கானதே  நாளை முதல் ஏப்ரல் 20 வரை விடுமுறை அறிவிப்பு ஆசிரியங்க தரப்புக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.

அரசின் அறிவித்தல் மக்கள் நலன் மேல் எனில் வெளிநாட்டு விமானசேவைகள் முதல் நிறுத்தப்படவேண்டும் உல்லாசப்பயணிகள் என்று எவரையும் குறிப்பிட்ட காலத்திற்கு உள்நுழைய அனுமதித்தல் தவறு. மக்கள் கூடும்"மையங்கள் பொழுதுபோக்கு நிகழ்வுகள் ரத்துச்செய்யப்பவேண்டும். இவை எல்லாம் நடைபெற பிள்ளைகளை பாடசாலை மட்டும் போகாது தடுப்பது உண்மையில் தொழிற்சங்கங்களிற்கு கிடைத்த வெற்றியே. கடந்த சுகயீனபோராட்டம் வலுவடைந்திருந்தமையும் இத்தீர்மாத்திற்கான வலுவான காரணமாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

No comments