யாழ்ப்பாணம்:இன்று ஒன்று மட்டுமே?


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக முதல் நாளிலேயே இரு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஒரு சிங்கள கட்சி மற்றும் சுயேட்சைக்குழு ஆகியனவே நேற்று தமது வேட்புமனுக்களை யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளனர். 

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டது. 

தொடர்ந்து எதிர்வரும் 19 ஆம் திகதி வியாழக்கிமை வரைக்கும் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வேட்புமனு கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலப்பகுதியின் முதல் நாளில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை கையளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 

குறிப்பாக நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுக்களை கையளிப்பதற்காக பிரத்தியோகமாக ஒழுங்கமை இடத்திற்கு ஜனசெத பெரமுன கட்சியினர் வருகைதந்திருந்தனர். 

பத்த முல்ல சில ரத்தின தேரரர் தலமையில் யாழ்.நாவற்குழியில் உள்ள சிங்கள குடியேற்றத்தில் வசிப்பவர்களுடன் வந்த அவர்கள் முதலாவது வேட்புமனுவினை கையளித்திருந்தனர். 

அதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழு ஒன்றும் தமது வேட்புமனுவினை கையளித்துள்ளது. 

இருப்பினும் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுபதற்கு பல கட்சிகள்  மற்றும் சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணங்களை செலுத்தியிருந்த போதும் நேற்று முதல்நாளில் ஒரு கட்சி ஒட்பட இரு தரப்பினரே தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments