இலங்கைக்கு அமெரிக்க பாராட்டு


சட்டவிரோத போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்தில் அண்மைக் காலத்தில் இலங்கை கடற்படையினர் வெளிப்படுத்தியுள்ள வெற்றிக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் சட்டவிரோத போதைப்பொருட்களை எதிர்த்துப் போராடுவதில் அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாகவும், ஏனைய பங்காளர்களுடன் இணைந்து செயற்படுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தமது நாட்டினால் நன்கொடையாக வழங்கப்பட்ட சமுத்ரா மற்றும் கஜபாகு ஆகிய கப்பல்கள் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க உதவுவதாகவும் அமெரிக்க தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு மீன்பிடிப் படகுகளை கடற்படையினர் இந்த வாரம் கைப்பற்றியிருந்தனர்.
காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு இந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments