மொட்டில் இருந்து சபாநாயகராக மலர சிறிசேனக்கு ஆசை?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் மஹிந்த மஹிந்த ராஜபக்சவை உட்கட்சி பிரமுகர்கள் பலர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொது நிகழ்வுகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சிறிசேன வெளியிட்டு வருவதால் தேர்தல் காலத்தில் அதன் தாக்கங்கள் ஏற்படலாமெனக் கருதியே இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிசேன உள்ளூர் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளும் விமர்சனங்கள் அவரின் பழிவாங்கும் உள்ளக நோக்கத்தை காட்டுவதால் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மேற்படி பிரமுகர்கள் மஹிந்தவிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிகிறது.

இதேவேளை பொலனறுவை மாவட்டத்தில் கூடுதலான வாக்குகளை பெற்று அடுத்த நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவியை பெற சிறிசேன யோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

No comments