ரஜினியின் சந்திப்பு ஏமாற்றத்தில், விரக்தியில் தொண்டர்கள்!

தனது  மக்கள் மன்றத்தைச் சேர்ந்த  மாவட்ட நிர்வாகிகளை இன்று சந்தித்த நடிகர் ரஜினி, கூட்டம் முடிவடைந்தபிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

அவரிடம் செய்தியாளர்கள், ஏற்கனவே நீங்கள் கூறியபடி, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நீங்களும் கமலும் சேர்ந்து நிரப்புவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்தவர்,  அதற்கு நேரம் வரும்போதுதான் பதில் தெரியும் என்று நழுவலாக பதில் கூறினார்.
தொடர்ந்து கேள்வி எழுப்பிய செய்தியளார்கள்,  நீங்கள் கட்சி தொடங்குவதாக அறிவித்து 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன? இன்றைய கூட்டத்தில் என்ன பேசினீர்கள்? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்தவர்,  கூட்டத்துக்குள் என்ன நடந்தது என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது என்று மழுப்பலாக பதில் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் விடாப்பிடியாக கேள்வி எழுப்ப,  மாவட்டச் செயலாளர்களுடன்  கட்சி தொடங்குவது  குறித்துத்தான் பேசினேன். கூட்டம் திருப்தியாக இருந்தது. அவர்களிடம் நிறைய கேள்விகள் இருந்தன. அதற்கெல்லாம் நான் பதிலளித்தேன். நிறைய விஷயங்களைப் பரிமாறிக்கொண்டோம். அவர்களுக்கு நிறைய திருப்தி.
ஆனால் எனக்கு ஒரு விஷயத்தில் அவ்வளவு திருப்தி இல்லை. ஏமாற்றம்தான். அது என்னவென்று நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. பிறகு சொல்கிறேன் என்றார்.

ஏமாற்றம் என்றீர்களே அது என்ன? என செய்தியாளர்களை ரஜினி மீண்டும் மடக்க,  தனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றம்தான். நேரம் வரும்போது சொல்கிறேன் என்று மீண்டும் கூறிவிட்டு நழுவினார்.

ரஜினியின் இன்றைய பேட்டி, மழுப்பலாகவும், நழுவலுமாகவே இருந்தது. இதன்மூலம் அவர் தனது அரசியல் பிரவேசம் இப்போதைக்கு இல்லை என்பதை காட்டுகின்றது இதனால் அவரின் தொண்டர்கள் கடும் எமற்றமடைந்துள்ளதாக தமிழக ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர்.

No comments