பிள்ளையானுக்கு அனுமதி கிடைத்தது?

கொலை வழக்கில் விளக்கமறியலில் உள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரான சி.சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சிவில் நீதிமன்றம் இன்று (12) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி மட்டு சிறைச்சாலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கி அதற்கான உரிய நடவடிக்கையை செய்யுமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் கட்டளையிட்டுள்ளார்.

கடந்த 2005 ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் உட்பட ஐவர் 2015-10-11ம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments