டியூசன் வகுப்புக்களும் நிறுத்தம்?

கொரோனா வைரஸ் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக நாட்டின் அனைத்து தனியார் பிரத்தியேக வகுப்புக்களுக்கும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலைகளுக்கும் நாளை (13) முதல் ஏப்ரல் 20ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ் ஒழுங்கினை உள்ளூராட்சி சபைகள் (மாநகர சபை, நகரசபை, பிரதேச சபைகள்) உரிய முறையில் மேற்பார்வை செய்து அர்ப்பணிபுடன் இதனை நடை முறை படுத்தும்படியும் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments