கொரோனா தாக்கம் ! அயர்லாந்தில் பாடசாலைகள், கல்லூரிகள் மூட உத்தரவு!

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் 
அயர்லாந்து குடியரசில் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பிற பொது வசதிகள் மூடப்பட்டுள்ளன.

இன்று வியாழக்கிழமை 18:00 முதல் மார்ச் 29 வரை பாடசாலைகள் கல்லூரிகள் மூடப்படும் என  ஐரிஷ் பிரதமர் லியோ வரட்கர் தெரிவித்தார்.

அயர்லாந்தில் நேற்றுப் புதன்கிழமை வயதான பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார்.

பகரித்தானியாவில் இப்போது 460 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எட்டு பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments