மன்னாரில் ஆயுதம் தேடி ஏமாந்த பொலிஸ்

மன்னார் - பேசாலை பிரதேசத்திற்கு உட்பட்ட வியாயடிப் பண்ணை காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாக பொலிஸார் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.

கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதியில் இரண்டாவது நாளகவும் நேற்று (13) காலை முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்ற போதும் எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.

No comments