வெளிநாட்டவர்களை தேடி தேடுதல்?வெளிநாடுகளில் இருந்து இருந்து இந்த மாதம் இலங்கை வந்தபோதும் கொரோனா பரிசோதனைக்கு உட்படாமல் வந்து தங்கியுள்ளோரைக் கண்டறிவதற்கான நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும்போது கோரொனா தடுப்பு மையங்களிற்கு செல்லாது நேரடியாக வந்தவர்களை இனம் கண்டு படையினரின் பொறுப்பில் உள்ள பரிசோதனை மையங்களிற்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் நேற்று மாலை அதிரடியாக ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் , சுகாதார வைத்திய அதிகாரி , பொலிசார் மாகாண சுகாதார வைத்திய அதிகாரிகள் ஆகியோரிற்கிடையிலான விசேட சந்திப்பின் பின்னர் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக முதல் கட்டமாக யாழ் . நகரின் மத்தியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகள் தங்ககங்கள் ஆகியவற்றில் திடீர் சோதனை இடம்பெற்றது. இதன் பிரகாரம் தற்போது உலகில் கொரோனா தாக்கம் அதிகமாக கானப்படும் நாடுகளில் இருந்து இம் மாதம் வருகை தந்த உள்ளூர் வெளியூர் பயணிகள் இனம்கானும் நடவடிக்கை இடம்பெற்றது.

இந் நடவடிக்கையில் நேற்று ஒரே தினத்தில் 7 விடுதிகளும் 4 தங்ககங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

No comments