நாளை யாழிலும் கலகலப்பு?


யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்க பிரதான கட்சிகள் இன்று முழு அளவில் தயாராகியுள்ளன.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் இன்று செவ்வாய்கிழமை (17) கையெழுத்திட்டுள்ளனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பணிமனையில் வேட்புமனுவில் வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர்.

இதன்படி தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், கஜதீபன், கு.சுரேந்திரன்;, சசிகலா ரவிராஜ், இம்மானுவேல் ஆனோல்ட் மற்றும் தபேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

இறுதி நேரத்தில் அம்பிகா அகற்றப்பட்டு இம்மானுவேல் ஆனோல்ட் இணைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் தனது வேட்பாளர்களை தயார் செய்துள்ளதுடன் நாளை மறுதினம்  வியாழக்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளது. 

இதனிடையே சஜித்தின் ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்டப் பிரதான வேட்பாளராக கணேஸ்வரன் வேலாயுதம் இன்று கையெழுத்திட்டுள்ளார்.

சஜித் தரப்பின் முக்கிய வேட்பாளராக யாழ்.தேர்தல் களத்தில் குதித்துள்ள கணேஸ் வேலாயுதத்துடன் உமா பிரகாஸ் உள்ளிட்ட அணியினர் இணைந்துள்ளனர். இவர்களும்  நாளை வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளனர்.

இதேவேளை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி,தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் நாளை தமது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளன.

No comments