எட்டாப்பழம் புளிக்கும்:வரதர்?


நாடாளுமன்றத் தேர்தல் தமிழர்களுக்கு பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஐப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட அவர் பல கட்சிகளது கூட்டுக்கு முயற்சித்த போதும் எவருமே கண்டுகொண்டிருக்கவில்லை.

இந்நிலையில் கருத்து வெளியிட்டுள்ள அவர் நாடாளுமன்றத் தேர்தல் பெரிய மாற்றத்தைக் கொடுக்குமென்று நான் கருதவில்லை. அரசியல் கட்சிகள் புதிதாக உருவாகியிருக்கலாம். புதிய கூட்டுக்கள் எல்லாம் வந்திருக்கலாம். ஆனால் அரசியல் போக்கில் ஒரு மாற்றம் ஏற்படுத்தக் கூடிய நிலைமைக்கு ஒரு வாய்ப்பு காணப்படவில்லை.

ஏனென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த முறை கிடைத்த ஐந்து வருசடம் பெரிய பாக்கியமாக கிடைத்தது. அந்த பாக்கியம் எத்தனை பேருக்கு விளங்கியிருக்கும் அல்லது எத்தனை பேர் அதனைப் புரிந்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியிவில்லை.

ஆனால் அந்தச் சந்தர்பத்தை முழுவதுமாக தவறவிட்டனர். அதை எப்;படி தவறவிட்டனர் என்றே சொல்லத் தெரியவில்லை. ஏனெனில் திட்டமிட்டு தெரிந்தே தவறவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டியுள்ளளது. ஆனால் அப்படிப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றும் இனி அண்மைக்காலத்தில் கிடைக்கப் போவதில்லை.

தென்னிலங்கையில் இருக்கக் கூடிய பிரதானமான கட்சிகள் சிங்கள மக்கள் மத்தியில் இனவாத அலையை கிளப்பி அல்லது தமிழருக்கு விரோதமான எண்ணங்களை கிளப்பி வாக்குத் தேடுகின்ற போட்டிகள் தான் அங்கே முனைப்படைந்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தென்னிலங்கை கட்சிகளுடன் அணி சேருவதற்கான வாய்ப்பு எங்களுக்கு எந்தவகையிலும் இல்லை.

தமிழ் தரப்பு ஒற்றுமை குறித்து பேசப்படுகின்ற நிலையில் கூட்டமைப்பு தமது வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானத்து ஆசனங்களுக்கான பங்கீடுகளையும் செய்து கொண்டுள்ளார்கள். அதே போல விக்கினேஸ்வரனின் கூட்டணியைப் பொறுத்தவரையில் அவர்கள் எங்களுடன் பேசுவதற்குத் தயாரில்லை என்று பகிரங்கமாகவே அறிவித்தும் விட்டார்கள் எனவும் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

No comments