புலம்பெயர் உறவுகள் வரவேண்டாம்?


வெளிநாட்டுக் குடியுரிமையுடையவர்கள் இரட்டைக்குடியுரிமை உடையவர்கள் வெளிநாடுகளில் வாழ்பவர்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் புலம்பெயர்ந்த உறவுகள் வடக்கிற்கு வருகைதர இருப்பின் அவர்களின் வருகையை பிற்போடச்செய்வது சிறந்த முடிவாகும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இல்லாவிடில் அவர்களின் வருகையை அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அல்லது யாராவது சுகாதார வைத்திய உத்தியோகத்தருக்கு அறிவிக்கவேண்டும். அவர்கள் வருகை தந்த நாளிலிருந்து 02 வாரங்கள் (14 நாட்கள்) சுயதனிமைப்படுத்தலில் இருத்தல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து வணக்கத்தலங்கள் கலாச்சார நிகழ்வுகள் மதம் சார்ந்த நிகழ்வு விளையாட்டு ஒன்றுகூடல்கள் போன்றவற்றிற்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளவும் மறு அறிவித்தல்வரை பூங்காக்கள் உணவகங்கள் மற்றும் சினிமாக்களுக்கு செல்வதை தவிர்க்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே வடமாகாண அரச அலுவலகங்களிற்கான விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள போதும் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதை கருத்தில் கொண்டு மாவட்ட செயலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.அத்தியாவசிய சேவைகள் இயங்குகின்றன.

இதனிடையே யாழ்.சிறையிலும் கைதிகளை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாடசாலைகள்,பல்கலைக்கழகம் மற்றும் திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளமை கறிப்பிடத்தக்கது.

No comments