மீன்பிடியை தடை செய்ய கோரிக்கை


யாழ் மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் கடற்தொழிலினை தற்காலிக தடை செய்வது பொருத்தமற்றது என தெரிவித்து யாழ்மாநகரசபை முதல்வர் ,மீன்பிடி
நீர்வளத்துறை அமைச்சர் , வடமாகாண ஆளுனர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு சிவன் அறக்கட்டளை ஸ்தாபகர் கணேஸ்வரன் வேலாயுதம் அவர்கள் கடிதமூலம் கோரிக்கை அனுப்பியுள்ளார்.
உலகளவில் தற்போது அனைவரும் கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளோம். இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தமது அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
மக்களது உணவுத்தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது நம் அனைவரதும் கடமையாகும். இதனால் விவசாய மரக்கறி உற்பத்திகள் மாத்திரம் அல்லாது கடலுணவுகளையும் மக்களுக்கு வழங்க வேண்டிய தேவையுள்ளது. அத்துடன் கடற்கரையோரத்தில் வசிப்பவர்கள் தமது தொழிலை நம்பியே வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்களின் அன்றாட உழைப்பை தடைசெய்வது பொருத்தமற்றது.
கொழும்புத்துறை தொடக்கம் நாவாந்துறை வரையான கரையோர மக்கள் பாமர மக்களாவர். அவர்களுக்கு கொரோனா தொற்று தொடர்பான தெளிவான விழிப்புணர்வுகள் வழங்கப்படல் வேண்டும். மேலும் கடற்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு சரியான சட்ட ஒழுங்குகளை பிரயோகிப்பதன் மூலம் அவர்களை வழிநடத்த முடியும். மாறாக கடற்தொழில் செய்வதை தடை செய்வோமானால் மக்களது உணவுதேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். இனிவரும் காலங்கள் எவ்வாறு அமையும் என்று தெரியாத நிலையில் தற்போது தொழிலில் ஈடுபடுபவர்களை தடை செய்யாது அவர்களுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கி தொழிலை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments