இலங்கையில் இரண்டாவது மரணம்??

கொரோனா தொற்றால் மற்றுமொருவர் மரணம். நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, IDHகு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்
.

நீர்கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இருந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு இன்று மதியம் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி (65 வயதான, முகமட் ஜமால்) சற்றுமுன் மரணித்துள்ளார்.

யாழ்ப்பாணம்  போதனா மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொலி ஸார், பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய், தாவடியைச் சேர்ந்த பெண், ஆனைக்கோட்டை, உரும்பிராய், மன்னாரைச் சேர்ந்த 4 பேரே இவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையிலிருந்து இவர்களது மாதிரி கள் எடுக்கப்பட்டு கொரோனா தொற்று உறுதிப்படுத்தலுக்காக அநுராதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு பரிசோதனை முடிவு கள் கிடைக்கப்பெறும் என்று தெரியவருகின்றது.


தாவடியில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவரின் வீட்டிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள பெண் ஒருவரே கொரோனா சந்தேகத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நபர், நெடுந்தீவுக்கு வெளிநாட்ட வர்களுடன் சென்று வந்த நிலை யில் அவரும் கொரோனா தொற் றுக்குரிய சந்தேகங்களுடன் மருத்து வமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.



உரும்பிராயைச் சேர்ந்த பழ வியா பாரி ஒருவரும் கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் சேர்க்கப் பட்டுள்ளார். மேலும், மன்னாரைச் சேர்ந்த இருவர் இன்று மாலை கொரோனா தொற்றுச் சந்தேகத் தில் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

No comments