பொதுத்தேர்தல் ஜூன் ?


பொதுத் தேர்தலை ஜூன் மாதம் நடத்த எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏப்ரல் மாதம் இடம்பெறவிருந்த பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஜூன் மாதமளவில் பொதுத்தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.
அதற்குள் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

ஜூன் மாதம் பொதுத்தேர்தலை நடத்துவதாக இருந்தால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கல் செல்லுப்படியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆகவே பொதுத்தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற காரணத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் சட்ட ஆலோசனைக்கு உட்படுத்தப்படும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கையின் அதியுச்ச சட்டமான அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், கலைக்கப்பட்ட தினத்தில் இருந்து 3 மாதத்தினுள் புதிய நாடாளமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், எதிர்வரும் ஜீன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னதாக புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட வேண்டும்.

ஆனால் தற்போதைய அசாதாரண சூழலிலும் குறித்த திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நாடாத்துவது சாத்தியமில்லாமல் போகுமானால் நிலமையை கையாளுவது தொடர்பான ஆலோசனையை பெற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளவுள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் தேர்தல் திகதி தொடர்பான தீர்மானத்தினை மேற்கொள்ளும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments