ஊரடங்கு கோத்தாவே இறுதி முடிவு?


இலங்கையில் கோத்தாவின் ஊரடங்கு பற்றிய புதிய அறிவிப்பில்
ஊரடங்குச் சட்ட நடைமுறை முடிவுகள் எவையும் பிரதேச அல்லது மாவட்ட மட்டங்களில் எடுக்கப்படலாகாது!
நாட்டின் அனைத்து கிராமங்களில் இருந்தும் பெறப்படும் விபரமான அனைத்துத் தரவுகளையும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியே - ஊரடங்குச் சட்ட நடைமுறை தொடர்பான முடிவுகள் அரசாங்க உயர் பீடத்தில் எடுக்கப்படுகின்றன.
ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரதேசங்கள், மற்றும் நாள்கள் மற்றும் நேரங்கள் என்பவற்றைத் தெரிவுசெய்தல் என்பனவும்,
தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்களை அடையாளப்படுத்துதல், எவ்வளவு காலத்திற்கு அவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதனைத் தீர்மானித்தல் என்பனவும்,
- அரசாங்க உயர் மட்டத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
அதனால் - ஏதேனும் ஒரு பிரதேசத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யத் தேவையான தகவல்கள் இருப்பின், அந்த தகவல்கள் அனைத்தையும் - கொரோனா நோய்க்கிருமி ஒழிப்பிற்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மக்களின் வாழ்க்கையைச் சிரமத்துக்கு உள்ளாக்கும் வகையிலான எந்தவொரு தீர்மானமும் - பிரதேச அல்லது மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட முடியாது என தெரிவிக்க்பபட்டுள்ளது.

No comments