இலங்கையில் முதல் கொரோனா பலி!

கொரோனா (கொவிட்-19) தொற்றுக்கு உள்ளாகி ஐ.டி.எச் வைத்திய சாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த (60-வயது) ஒருவர் இன்று (28) சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் - மாரவிலவை சேர்ந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் என்றும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா காரணமாக முதலாவது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

இதேவேளை மேலும் ஏழு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments