கொரொனோவினால் ஐரோப்பாவில் இறப்புக்கள் ஐந்தாயிரத்தை தாண்டியது!

கொரோனா வைரஸின் இறப்பு எண்ணிக்கை ஐரோப்பாவில் 5,000 ஐத் தாண்டியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி வெகுவாக
நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சேகரித்த தரவுகளின்படி, சனிக்கிழமை உலகளவில் இறப்புகள் 12,000 ஆக உயர்ந்தன. 299,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சுமார் 91,500 பேர் குணமடைந்துள்ளனர் என்று கூறுகின்றனர்.

வியாழக்கிழமை சீனாவின் இறப்பு எண்ணிக்கையை கடந்த இத்தலியின் நிலை சனிக்கிழமை மேலும் 793 இறப்புக்களை எட்டியுள்ளது. இத்தாலியில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 4,825 ஐ . ஸ்பெயினின் இறப்பு எண்ணிக்கையும் 1,300 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, ஈரானில், இறப்புகளின் எண்ணிக்கை 1,500 அதிகரித்துள்ளமை உலகம் எங்கும் பேரவலத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

No comments