பிரான்சில் இன்று மட்டும் கொரோனாவால் 112 பேர் பலி!

பிரான்சில் இன்று சனிக்கிழமை மட்டும் கொரேனா தொற்று நோய் 112 பேரை பலியெடுத்துள்ளதுடன், 1,847 க்கு மேல் புதிய கொரேனா தொற்று
நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதுவரையில் பிரான்சில் 562 பேர் உயிரிழந்துள்ளனர்.

14,459 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

1,525 பேர் இக்கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிர் போகும் நிலையில் சிகிற்சை பெற்று வருகின்றனர்.

1,587 பேர் கொரேனா தொற்று நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதுமாக ஒரு இலட்சத்திற்கு அதிகமான காவல்துறையினரும் ஜென்தாமோியினரும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலைக்குச் செல்லுதல், அத்தியாவசியப் பொருட் கொள்வனவு, மருத்துவ சிகிற்சை பெறுதல் போன்ற அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காகவே மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

No comments