இத்தாலியில் கோரம்! கொரோனாவுக்கு ஒரே நாளில் 793 பேர் பலி!

இத்தாலியில் இன்று சனிக்கிழமை 793 பேரைப் பலியெடுத்துள்ளது கொரோனா வைரஸ். இன்றைய எண்ணிக்கையுடன் இத்தாலியில் 4825 பேர்
இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் 6,557 பேருக்கு கொரேனா தொற்று நோய்க்கு உள்ளமை கண்டிறியப்பட்டுள்ளது. இதுவரை இத்தாலியில் 53,578 பேர் குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்றைய நிலையில் 2,857 பேர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் உயிருக்குப போராடி வருகின்றனர்.

6,072 பேர் கொரோனா தொற்று நோயிலிருந்து விடுவிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரசின் இறப்பு எண்ணிக்கை ஐரோப்பாவில் 5,000 ஐத் தாண்டியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், சுவிற்சர்லாந்து மற்றும் ஜெர்மனியில் நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளதுடன் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சேகரித்த தரவுகளின்படி, இன்று சனிக்கிழமை உலகளவிலான கொரோனா இறப்புகள் 12,000 ஆக உயர்ந்தன. 299,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் சுமார் 91,500 பேர் குணமடைந்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளது.


No comments