சுவிசில் 24 பேர் பலி! கொரேனா தொற்று ஒரு நாளைக்கு 25% அதிகரிப்பு

கொவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் சுவிற்சர்லாந்தில் நேற்று சனிக்கிழமை மட்டும் 24 பேர்
உயிரிழந்துள்ளனர். புதிதாக 1,248 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். 6,863 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 141 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசரபிரிவில் சிகிற்சை பெற்ற வருகின்றனர். 131 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஒரு நளைக்கு 25 விழுக்காட்டுக்கு தொற்று நோய் அதிகரிப்பதாக சுவிற்சர்லாந்து சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தாலியின் எல்லையான இருக்கும் டிசினோவின் கன்டோன் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அப்பகுதியில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் டிசினோவின் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது.

ஏனையவர்கள் வேலைக்கு, மருத்துவரைச் சந்திக்க மட்டுமே வெளியே செல்லவேண்டும் என சுவிஸ் வானொலி எஸ்.ஆர்.எஃப் அறிவித்துள்ளது.

No comments