கூட்டமைப்புக்குள் ரணகளம் தொடர்கிறது?

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் தொடர்ந்தும் குழப்ப நிலை நீடிக்கின்றது.

இதன்காரணமாக இதுகுறித்து முடிவு செய்வதற்கான கால அவகாசத்தைப் பெறுவதற்காக, வேட்பாளர் பட்டியல் இறுதி நேரத்தில்தான் அறிவிக்கப்படும் என தமிழத் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் நேற்று (12) நடைபெற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் பெரும்பாலும் இறுதிசெய்யப்பட்டுவிட்டாலும், திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் குழப்ப நிலை நீடித்ததாக கூறப்படுகின்றது.

இதனால் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தினமான 19ம் திகதியே, வடக்குக் கிழக்கில் அந்தந்த மாவட்டங்களில் கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments