305 பேர் இன்று வெளியேறினர்

கண்காணிப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மேலும் 305 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

வவுனியா – பம்பைமடு கண்காணிப்பு நிலையத்தில் தங்கியிருந்த 167 பேர் இன்று (28) அங்கிருந்து வௌியேறினர்.

இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து நாட்டை வந்தடைந்தவர்களே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதனைத்தவிர, மட்டக்களப்பு – புனானை கண்காணிப்பு நிலையத்தில் தங்கியிருந்த 78 பேரும் கல்கந்த கண்காணிப்பு நிலையத்தில் தங்கியிருந்த 60 பேரும் கண்காணிப்பின் பின்னர் இன்று வீடுகளுக்கு திரும்பியதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments