வுஹானில் இருந்து 33 மாணவர்கள் நாடு திரும்பினர்

சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து 33 இலங்கை மாணவர்கள் இன்று அதிகாலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் .

இதன்படி குறித்த மாணவர்கள் தியத்தலாவ இராணுவ முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவ வேதியியல் மற்றும் உயிரியல், அணு, கதிரியக்க மறுமொழிப் படைப்பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் அவசரநிலைகளைக் கையாள முழு தகுதி பெற்றவர்களின் வழிகாட்டுதலின் கீழ் குறித்த மாணவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments