Header Shelvazug

http://shelvazug.com/

யாழ்.பல்கலையில் மீண்டும் டக்ளஸ் ஆட்கள்?


யாழ்.பல்கலையில் மீண்டும் டக்ளஸ் உள்ளிமட்ட ஈபிடிபி தரப்புக்களது ஆளுகை தலைதூக்க தொடங்கியுள்ளது.
மீண்டும் டக்ளஸ் ஆதரவு தரப்புக்கள் பல்கலைக்கழக பேரவைக்கு  நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வெளிவாரியாக 16 உறுப்பினர்கள் நியமிக்கப்படவேண்டும்.
எனினும் இம்முறை 14 உறுப்பினர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகம் வன்னி பல்கலைக்கழகம் என உருவாக்கப்படவுள்ள
நிலையில் அந்த வளாகத்தின் மூன்று உள்வாரி உறுப்பினர்கள் நீங்கலாக உள்வாரி உறுப்பினர்கள் 13
பேர் என்ற அடிப்படையில் பேரவைக்கு வெளிவாரியாக 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் .
பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை
பேராசிரியர் எஸ்.மோகனதாஸ்
உதவிக் கல்விப் பணிப்பாளர் பஞ்சநாதன் சுதர்சன்
கலாநிதி ஆறு. திருமுருகன்
வெளிநாட்டு தூதரக மூன்றாம் நிலைச் செயலாளர் விதுர்சன் வின்சன்ற் ராஜாராம்
சட்டத்தரணி ஆர்.ரி.விக்னராஜா (முன்னாள் மேல் நீதிமன்ற ஆணையாளர்)
கலாநிதி சுரேன் ராகவன் (முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர்)
நொத்தாரிசு மார்க்கண்டு திருவாதவூரன்
பொறியியலாளர் விஸ்வலிங்கம் சுதாகர் (வீதி அபிவிருத்தி அதிகார சபை)
தனியார் விவசாய நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் குலேந்திரன் சிவராம்
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு உறுப்பினர் மார்க்கண்டு நிமலன்
முன்னாள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர் பொன்னையா தியாகராசா
கணக்காளர் வி. கனகசபாபதி
ஊடகவியலாளர் கோடீஸ்வரன் ருசாங்கன்
ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments