கிணற்றில் விழுந்து சிறுமி பலி

அச்சுவேலி, வல்லைப் பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஜெகதீஸ்வரன் அட்சயா (5-வயது) என்ற சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (02) முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயிருந்த நிலையில் அவரை தேடியபோது குறித்த கிணற்றில் வீழ்ந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவரை மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

No comments