கூட்டமைப்பின் பங்காளிகள் இம்முறை தீவிரம்?


தமிழ் தேசியக்கூட்டமைப்பினில் தமிழரசுக்கட்சி தனித்து முடிவெடுக்கும் போக்கிற்கு எதிராக ஏனைய பங்காளிகள் தீர்க்கமான நகர்வுகளை ஆரம்பித்துள்ளனர்.ஏற்கனவே ஆசனப்பங்கீட்டு விடயத்தில் இம்முறை முன்கூட்டியே தலையிட்டு ஆசனங்களை பெற்றுக்கொண்ட ப ங்காளிகள் ஏனைய விவகாரங்களிலும் ஐனப்பு காட்டிவருகின்றனர்.
இதனிடையே    புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை  பெற்றுக்கொள்ளும் செயற்பாடு, இன்றுடன் (17) நிறைவடைகின்றது.
மாலை 4 மணி வரை அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
70 விண்ணப்பங்கள் இதுவரை  கிடைத்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலான விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாதவை எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, சரியான விண்ணப்பங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று கையளிக்க முடியும் என ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

No comments